கரோனா பெருந்தொற்று உலகின் பொருளாதார பெருஞ்சக்திகளான ஐரோப்பியா, அமெரிக்கா நாடுகளையே கடும் சோதனைக்குள்ளாக்கியது. இந்நிலையில், பின்தங்கிய நாடுகளைக் கொண்ட கண்டம் இதை சமாளிப்பதில் பெரும் சிக்கலை சந்தித்தது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் கரோனா பரவியுள்ள நிலையில், காங்கோ நாட்டின் முன்னாள் அதிபர், சோமாலியா நாட்டின் முன்னாள் பிரதமர் ஆகியோரும் பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தனர்.
ஆப்ரிக்க நாடுகளின் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் பின்தங்கியுள்ளதால், பாதிப்பின் தாக்கம் வெகுவாக இருக்கும் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துவந்த நிலையில் அங்கு தற்போது நம்பிக்கையின் கீற்று தெரியத் தொடங்கியுள்ளது. அங்கு கரோனா தீவிரத் தன்மை மெல்ல தனியத் தொடங்கியுள்ளதாக ஆப்ரிக்க கண்டத்தின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஒருவார காலமாக அங்கு பாதிப்பு எண்ணிக்கை குறைவதாக அவர் கூறியுள்ளார்.