தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்ரிக்காவைத் துரத்தும் கரோனா; பேரழிவைத் தருமா? - ஐ.நா. அச்சம்

ஆப்ரிக்க நாடுகளில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாகத் தீவிரமடைந்து வருவதால், அந்நாடு பேரழிவைச் சந்திக்கும் அபாயத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.

Africa
Africa

By

Published : Apr 25, 2020, 1:36 AM IST

முன்னேறிய நாடுகளை அதிகம் கொண்ட ஐரோப்பா, அமெரிக்க, ஆசிய கண்டங்களை வெகுவாகப் பாதித்துள்ள நிலையில், பின்தங்கிய கண்டமான ஆப்ரிக்காவிலும் தற்போது கரோனா வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை ஆப்ரிக்காவில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை சுமார் 26 ஆயிரத்தைத் தொட்டுள்ள நிலையில், ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மிகவும் பின்தங்கிய ஆப்ரிக்க நாடுகள், தங்களின் குறைந்தபட்ச தேவைக்குக் கூட அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளையே சார்ந்துள்ளன. தற்போதைய சூழலில் குறைந்தது 7.4 கோடி பரிசோதனைக் கருவிகள், 30 ஆயிரம் வென்டிலேட்டர்கள் ஆப்ரிக்க நாடுகளுக்குத் தேவைப்படுகிறது. ஆனால், பத்து ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு வென்டிலேட்டர்கள் கூட, இல்லாததே நிதர்சனம். இந்நிலையில், அந்நாடுகளுக்கு பிறநாடுகள் உதவக்கூடிய சூழலில் இல்லை என்ற வருத்தத்தை ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலிலும் தங்களால் இயன்ற உதவியை அமெரிக்க, ஐரோப்பா மற்றும் வளர்ந்த நாடுகள் ஆப்ரிக்காவுக்கு வழங்கி வருகின்றன. ஆனால், இந்த உதவிகள் ஆப்பிரிக்க நாடுகளின் தேவையை ஒப்பிடும்போது மிகக்குறைவாகும். கடந்த ஒரே வாரத்தில் ஆப்பிரிக்காவில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 43 விழுக்காடு உயர்ந்துள்ள நிலையில், விரைவில் அங்கு பேரழிவு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை ஐயத்தை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கரோனாவைத் தடுக்க நைஜீரியாவில் நடக்கும் கொடூரம்

ABOUT THE AUTHOR

...view details