நைரோபி:கென்யா நாட்டின் கிடுய் மாகாணத்தில் உள்ள என்சியூ ஆற்றை கடக்க முயன்ற பேருந்து ஒன்று வெள்ளம் காரணமாக தண்ணீருக்குள் கவிழ்ந்து அடித்து செல்லப்பட்டது.
இந்த விபத்தால் பேருந்தில் இருந்த 48 பேர் நீரில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் 17 பேர் மீட்கப்பட்டனர். 4 குழந்தைகள் உள்பட 31 நீரில் மூழ்கி பலியாகினர்.