தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

விபத்தில் சுக்குநூறான தனியார் பேருந்து; சுற்றுலாப் பயணிகள் 22 பேர் பலி!

துனிஷியாவின் வடக்கு பகுதிக்கு சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழந்ததாக துனிஷியா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

22-killed-21-hurt-in-tunisia-bus-crash
22-killed-21-hurt-in-tunisia-bus-crash

By

Published : Dec 2, 2019, 12:16 PM IST

துனிஷிய தலைநகரான துனிஸ் பகுதியிலிருந்து 115 மைல்கள் தள்ளியுள்ள ஏன் ட்ராஹம் பகுதிக்கு 43 பேர் தனியார் பேருந்தில் சுற்றுலா கிளம்பியுள்ளனர். இயற்கை அழகியல் அதிகமாக இருக்கும் ஏன் ட்ராஹமில் அதிகமான மலைகள் உள்ளன.

அந்த மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றபோது, குறுகிய திருப்பங்களில் பேருந்தை திருப்ப முடியாமல் திணறிய ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலையிலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்ததாகவும், மீதமுள்ள 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் துனிஷியா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பேருந்து விபத்தில் 22 பேர் பலி

இந்த சம்பவம் துனிஷிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக துனிஷிய கால்பந்து சம்மேளனம் சார்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டிக்கு முன்னதாக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மெக்சிக்கோவில் 14 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை.!

ABOUT THE AUTHOR

...view details