தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நைஜீரிய கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்து 18 இந்தியர்கள் விடுதலை! - Nigeria in India tweet

டெல்லி : நைஜீரிய கடற்கொள்ளையர்களால் கதட்டப்பட்ட 18 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

nigeria pirates Indians released
nigeria piratNigeria pirates Indians released es indians released

By

Published : Dec 23, 2019, 8:16 PM IST

நைஜீரியா அருகே கினியா வளைகுடாவில் டிசம்பர் 3ஆம் தேதி ஹாங்காங் கப்பல் ஒன்றை சிறைபிடித்த நைஜீரிய கடற்கொள்ளையர்கள், அதில் பயனித்த 18 இந்தியர்கள் உட்பட 19 மாலுமிகளைக் பிணைக்கைதிகளாக கடத்தி தப்பிச் சென்றனர்.

இந்நிலையில், நைஜீரியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட அந்த 18 இந்திய மாலுமிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக நைஜீரியா இந்தியத் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

நைஜீரியா இந்தியத் தூதரகம் ட்வீட்

இதுதொடர்பாக நைஜீரிய இந்தியத் தூதரகம் வெளியிட்டிருந்த ட்வீட்டில், "டிசம்பர் 3ஆம் தேதி, எம் டி நேவ் காஸ்டலேஷன் (MT Nave Constellation) என்ற கப்பலிருந்து (கடற்கொள்ளையர்களால்) கடத்தப்பட்ட 18 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நைஜீரியா கடற்படை உறுதி செய்துள்ளது. மாலுமியர்களை பாதுகாப்பாக மீட்டெடுக்க உதவிய அனைத்து தரப்பினரும் நன்றி" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : 18 இந்தியர்கள் கடத்தல்: நைஜீரியா அரசுடன் தொடர்பில் உள்ளோம் - இந்திய தூதரகம்

ABOUT THE AUTHOR

...view details