தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / headlines

மதுரையில் இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது - போக்சோ சட்டம்

மதுரை: செல்லுார் பகுதியில் 16 வயது சிறுவனுக்கு நான்கு நாட்கள் பாலியல் தொந்தரவு கொடுத்த இளம்பெண்ணை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Posco

By

Published : Mar 28, 2019, 7:34 PM IST

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்து வருநிலையில்,பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மதுரையில் இளம்பெண் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை செல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மலா. இவர் தனது கணவனைப் பிரிந்து தனியாக வாழ்ந்துவருகிறார். இவரின் வீட்டருகே வசித்துவரும் 16 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று நான்கு நாட்கள் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணிடமிருந்து தப்பித்துவந்த சிறுவன் இதைப்பற்றி தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை செல்லுார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நிர்மலாவை போக்சோ சட்டத்தின்கீழ் காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.


ABOUT THE AUTHOR

...view details