இதுகுறித்து ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:
"விங் கமாண்டர் அஞ்சலி சிங் செப்.10ஆம் தேதி முதல் இந்தியத் தூதரகத்தில் துணை விமானப் படை தூதராக (Deupty Air Attache) பணியில் சேர்ந்தார்.

இதன்மூலம், இந்தியாவின் முதல் பெண் ராணுவத் தூதர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார்" எனக் கூறப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படையில் கடந்த 17 வருடங்களாக பணியாற்றிவந்த விங் கமாண்டர் அஞ்சலி சிங், மிக்-29 ரக விமானங்களை இயக்கும் திறன் படைத்தவராவார்.
அஞ்சலி சிங்கிற்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள பதவி, விமானப் படையில் பணியாற்றும் உயர் அலுவலர்களுக்கு வழங்கப்படும் பதவி என்பது குறிப்பிடத்தக்கது.