தமிழ்நாடு

tamil nadu

மேற்கு வங்க தேர்தல் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

By

Published : Apr 26, 2021, 7:13 AM IST

Updated : Apr 26, 2021, 9:02 AM IST

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று ஏழாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

Election
Election

நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இன்ற ஏழாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த ஏழாம்கட்ட வாக்குப்பதிவானது 36 தொகுதிகளுக்கு நடத்தப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த முடிவுசெய்யப்பட்டு, ஆறு கட்டங்களுக்குத் தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று ஏழாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

மேற்கு வங்க தேர்தல்

இந்த வாக்குப்பதிவானது காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6.30 மணிவரை நடைபெறுகிறது. எட்டாம்கட்ட வாக்குப்பதிவு வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வாக்குப்பதிவு

மேற்கு வங்க தேர்தல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். அதில், "மேற்கு வங்கத் தேர்தலின் ஏழாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

நரேந்திர மோடி ட்வீட்

வாக்காளர்கள் தங்களது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கோவிட்-19 தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய நாளே முடிவுகளும் அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அன்றையே நாளே தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட உள்ளது.

Last Updated : Apr 26, 2021, 9:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details