தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / headlines

ஏமன் நாட்டிற்கு சட்டவிரோத பயணம் - இருவர் கைது

ஏமன் நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்றுவிட்டு, திரும்பிவந்த கேரளா, புதுக்கோட்டை இளைஞர்கள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏமன் நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்றுவிட்டு திரும்பிவந்த இருவர் கைது
ஏமன் நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்றுவிட்டு திரும்பிவந்த இருவர் கைது

By

Published : Jul 3, 2021, 8:11 PM IST

Updated : Jul 5, 2021, 10:30 AM IST

சென்னை: கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்தவா் சமீர் (38). புதுக்கோட்டையைச் சேர்ந்தவா் பெரோஸ்கான் (33). இவா்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு ஓட்டுநர் வேலைக்காக சென்றனர்.

இவர்களுக்கு சவூதி அரேபியா செல்வதற்கான விசாக்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதி ஆகிவிட்டன. ஆனாலும் இருவரும் சவூதி அரேபியாவில் தங்கியிருந்து வேலை செய்துவந்தனர்.

இந்நிலையில் இருவரும் இந்தியா திரும்ப முடிவுசெய்தனர். ஆனால் சவுதி அரேபிய அரசு, சட்டவிரோதமாக தங்கியிருப்பவா்களுக்கு கடும் தண்டனை விதிக்கும். அதிலிருந்து தப்பிக்க இவர்கள் ஏமன் நாட்டிற்கு சென்று, அங்கிருந்து இந்தியா திரும்ப முடிவுசெய்தனர்.

அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் சவுதி அரேபியாவிலிருந்து ஏமன் சென்றனா். அங்கு டிராவல் ஏஜெண்டுகள் மூலமாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுத்தனர். தங்களுடைய பாஸ்போர்ட்கள் காணாமல் போய்விட்டதாக பொய்யான காரணம் கூறி (Djibouti) ஜிபூட்டியில் உள்ள இந்திய தூதரகத்தில் மனு கொடுத்து தங்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று முறையிட்டனா்.

இதையடுத்து தூதரகம் இருவருக்கும் எமர்ஜென்சி சா்டிபிகேட்கள் வழங்கியது. அதன் பின்பு இருவரும் ஏமனிலிருந்து சார்ஜா வழியாக சென்னை வரும் ஏர்அரேபியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று காலை சென்னை வந்தனா்.

சென்னை விமானநிலையத்தில் குடியுரிமை அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது சமீர், பெரோஸ்கான் இருவரும் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று வந்திருந்ததை கண்டுபிடித்தனா். இதையடுத்து இருவரையும் வெளியில் விடாமல் நிறுத்திவைத்து விசாரித்தனர். இவா்கள் ஏமன் நாட்டில் உள்ள தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவா்களா என்று விசாரித்தனா்.

ஏமன் நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்றுவிட்டு திரும்பிவந்த இருவர் கைது

ஆனால் இருவரும் தங்களுக்கும் தீவிரவாத அமைப்புக்கும் தொடா்பு இல்லை. ஏமனுக்கு செல்லக்கூடாது என்று ஒன்றிய அரசின் தடை பற்றி தங்களுக்கு தெரியாது என்று கூறினர். ஆனாலும் குடியுரிமை அலுவலர்கள், இருவரையும் கைது செய்தனர்.

ஏமன் நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்றுவிட்டு திரும்பிவந்த இருவர் கைது

அரசின் உத்தரவை மீறி பாதுகாப்பு தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று வந்துள்ளதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேல் நடவடிக்கைக்காக அவர்கள் இருவரையும் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Last Updated : Jul 5, 2021, 10:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details