தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / headlines

கர்நாடகாவில் பயங்கரம்: பஸ் - லாரி மோதி குழந்தை உட்பட 7 பேர் உயிரிழப்பு! பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற போது ஏற்பட்ட சோகம் - Kalaburagi district

கர்நாடகாவின் கல்புர்கி மாவட்டத்திற்கு அருகே பஸ் - லாரி மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

Bus - Lorry collides
பஸ் லாரி மோதி விபத்து

By

Published : Jun 3, 2022, 10:52 AM IST

Updated : Jun 3, 2022, 4:35 PM IST

கல்புர்கி:கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டம், கமலாபூர் கிராமம் அருகே பிடார்-ஸ்ரீரங்கப்பட்டான் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தும், சரக்கு லாரியும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (ஜூன் 3) காலை 6 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இரு வாகனங்களும் மோதிக் கொண்ட பிறகு பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பேருந்தில் கிட்டத்தட்ட 35 பேர் பயணித்துள்ளனர். இதில் 22 பேர் பேருந்து தீப்பிடிப்பதற்கு முன்பு வெளியேறி உயிர் தப்பி இருக்கின்றனர்.

கர்நாடகாவில் பயங்கரம்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் செகந்திராபாத்தை சேர்ந்த அர்ஜுன் குமார் - சரளாதேவியின் தம்பதியின் 4 வயது குழந்தை பிவான் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு கோவா சென்று விட்டு திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. விபத்தில் குழந்தை பிவான் , தந்தை அர்ஜூன் குமார் , தாய் சரளாதேவி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் பயங்கரம்

இதையும் படிங்க:சென்னையில் நடுரோட்டில் பற்றி எரிந்த பைக்!

Last Updated : Jun 3, 2022, 4:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details