ரிசர்வ் வங்கி நாணயக் கொள்கைக் கூட்டம் இன்று (பிப்.10) நடைபெற்றது. இது பட்ஜெட்டுக்குப் பிறகு நடத்தப்படும் முதல் கூட்டம் என்பதால் முதலீட்டாளர்கள் வர்த்தகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், சர்வதேச அளவில் பல நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்திவருவதாலும் ரிசர்வ் வங்கியும் தனது வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி நாணய வட்டி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டாம் என்ற முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாகவும்; பணவீக்கம் எதிர்பார்த்த அளவில்தான் இருக்கிறது என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியதால் பற்றிக்கொண்டன, பங்குச்சந்தைகள்.
விறுவிறுப்பான வியாழன்
வங்கிகளுக்குக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ ரேட் விகிதம் 4 விழுக்காடாக தொடரும் என்றதுடன் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 விழுக்காடாகவே தொடரும் என்றதும் ஜிடிபி விகிதம் 7.8 விழுக்காடாக இருக்கிறது எனக்கூறியது.