கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை. சமூக செயற்பாட்டாளரான இவர், அப்பகுதியில் இருந்த 40 ஏக்கர் பரப்பளவுடைய ஏரியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றத்தில் சரணடைந்தவர்கள் அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததால், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ஏரியை மீட்க வருவாய்த் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிக்கப்பட்ட 40 ஏக்கர் ஏரி மீட்கப்பட்டது. இதனால் வீரமலை மீது ஆக்கிரமிப்பாளர்கள் கடும் கோபத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் சரணடைந்தவர்கள் இந்நிலையில், ஜூலை 30ஆம் தேதி வீரமலையையும் அவரது மகனையும் அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏரி ஆக்கிரமிப்பு இரட்டை கொலை வழக்கு இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், முதலைப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (எ) சௌந்திரராஜன், பிரபாகரன், கவியரசன், சண்முகம், சசிகுமார், ஸ்டாலின் ஆகிய ஆறுே பேரை மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முத்துராமன் முன்னிலையில் சரணடைந்தனர்.