டெல்லி:இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக இரண்டு லட்சத்து 34 ஆயிரத்து 281 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று விகிதம் 14.50 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றால் ஒரே நாளில் 893 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 94 ஆயிரத்து 91 ஆக உள்ளது. நாட்டில் தற்போது 18 லட்சத்து 84 ஆயிரத்து 937 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், குணமடைவோரின் விகிதம் 94.21 ஆக உள்ளது.
இந்தியா புதிய மைல்கல்
மூன்று லட்சத்து 52 ஆயிரத்து 784 குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 87 லட்சத்து 13 ஆயிரத்து 494 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 165.70 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவின் 18 வயது மேற்பட்டவர்களில் 75 விழுக்காட்டினர் தடுப்பூசி செலுத்தி, கரோனா தொற்று தடுப்பில் புதிய மைல்கல்லை அடைந்துள்ளோம் என பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காந்தி நினைவு நாள்: மரியாதை செலுத்திய தலைவர்கள்