தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / headlines

மின்சக்தித் துறையில் இந்தியா- டென்மார்க் ஒப்பந்தம்

டெல்லி: மின்சக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியாவும், டென்மார்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

power sector
power sector

By

Published : Jun 9, 2020, 4:01 AM IST

Updated : Jun 9, 2020, 7:04 AM IST

மின்சக்தித் துறையில் சமநிலை, மறுபரிசீலனை, இருதரப்புக்கும் பலன் ஆகியவற்றின் அடிப்படையில் வலுவான, ஆழமான, நீண்டகால ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இந்திய – டென்மார்க் எரிசக்தி ஒத்துழைப்புக்கான, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இந்தியாவும், டென்மார்க்கும் ஜூன் 5ஆம் தேதி கையெழுத்திட்டுள்ளன.

இந்தியத் தரப்பில் மின்சக்தித் துறையின் செயலர் சஞ்சீவ் நந்தன் சகாயும், டென்மார்க் தரப்பில் இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் ஃப்ரெட்டி ஸ்வேனும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

நீண்டகால எரிசக்தித் திட்டமிடல், தொலைநோக்கு, மின்சக்தி விநியோகத்தில் தளர்வு உள்ளிட்ட மின்சக்தித் துறை தொடர்பான பல்வேறு அம்சங்களில் இருதரப்பும் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். இதற்காக இந்த ஒப்பந்தத்தின்கீழ் கூட்டு செயற்குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: ராமர் கோயில் கட்டுமான பணிகள் ஜூன் 10ஆம் தேதி தொடக்கம்

Last Updated : Jun 9, 2020, 7:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details