தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / headlines

பீகார் கிராமத்தில் 12 மணி நேரம் வீடுகளை காலி செய்யும் மக்கள்- விநோத திருவிழா

பீகார் மாநிலத்தில் உள்ள நோராங்கியா கிராம மக்கள் பைசாக் திருவிழா அன்று வீடுகளை விட்டு 12 மணி நேரம் வெளியேறும் விநோத திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

பகாஹா கிராமத்தில், ஒவ்வொரு ஆண்டும் பைசாக் அன்று மக்கள் 12 மணிநேரம் தங்கள் வீடுகளை காலி செய்கிறார்கள்
பகாஹா கிராமத்தில், ஒவ்வொரு ஆண்டும் பைசாக் அன்று மக்கள் 12 மணிநேரம் தங்கள் வீடுகளை காலி செய்கிறார்கள்

By

Published : May 12, 2022, 11:02 AM IST

Updated : May 12, 2022, 11:16 AM IST

பகாஹா:பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் பகஹாவின் நோராங்கியா கிராமத்தில் உள்ள கிராம மக்கள் ஆண்டு தோறும் பைசாக் மாதத்தின் நவமி நாளன்று ஒன்பதாம் நாளில் வீடுகளை விட்டு வெளியேறி 12 மணி நேரம் காட்டில் வசிக்கின்றனர். இது அவர்களது முன்னோர்களால் பின்பற்றப்பட்டப்பட்டு வரும் நடைமுறையாகும்.இதன் மூலம் பெண் கடவுளால் வழங்கப்பட்ட சாபம் நீக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

இந்த கிராமத்தில் தாரு என்ற சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அவர்கள் இந்த நாளன்று தங்கள் கால்நடைகளை நாள் முழுவதும் காட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்கள். மேலும் பழங்காலத்தில் இப்பகுதியில் பரவியதாகக் கூறப்படும் ஒரு தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க இந்தப் பழக்கம் உருவானது என கூறப்படுகிறது. முன்னதாக அடிக்கடி தீ மற்றும் பெரியம்மை மற்றும் காலரா போன்ற பிற நோய்களும் அடிக்கடி பரவி உள்ளது.

இது குறித்து அந்த கிராமத்தில் வசிக்கும் மகேஷ்வர் காஜி கூறுகையில், ‘ஒரு துறவி கிராமத்திற்கு ஒரு மருந்தைக் கொண்டு வந்தார். அதன் பலனால் நோயகள் குணமானது. அதனால் இந்த விழா கொண்டாடப்படுகிறது" என கூறினார்.

வால்மீகி புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள பஜனை குத்திக்கு கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக பயணம் செய்து, துர்கா தேவியை வழிபடுகிறார்கள். 12 மணிநேரம் வெளியில் செலவழித்த பின்னரே அவர்கள் வீடு திரும்புகின்றனர். காடுகளில் நாள் முழுவதும் பயணம் செய்தாலும், தங்கள் வீட்டைப் பூட்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பிகார் முதலமைச்சர் நிகழ்ச்சியில் குண்டுவீசப்பட்டதால் பரபரப்பு!

Last Updated : May 12, 2022, 11:16 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details