இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஜூன் 1 (இன்று) முதல் தமிழ்நாட்டில் கோவை - மயிலாடுதுறை (செவ்வாய் தவிர), மதுரை - விழுப்புரம் (தினமும்), திருச்சி - நாகர்கோவில் (தினமும்), கோவை - காட்பாடி (தினமும்) ஆகிய நான்கு தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுதவிர புதுடெல்லி - சென்னை சென்ட்ரல் (வாரம் இருமுறை) ராஜ்தானி எக்ஸ்பிரஸ் சேவையும் இயக்கப்படுகிறது.
பிறமாநிலங்கள், தமிழ்நாட்டிலுள்ள பிற மாவட்டங்களிலிருந்து பயணிப்போர் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை தவிர பிற மாவட்டங்கள் எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சிறப்பு ரயில்களில் மண்டலம் விட்டு மண்டலம் பயணிப்பவர்கள் கட்டாயம் தமிழ்நாடு அரசின் இ-பாஸ் பெற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மண்டலங்களுக்குள் பயணிப்பவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை.
தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் //TNepass.tnega.org இ-பாஸ்களை பயணம் மேற்கொள்வதற்கு முன் பெற்றுக்கொள்ள வேண்டும்,
அத்துடன், ரயில் பயணச்சீட்டின் பிஎன்ஆர் எண் (PNR number), பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை எழுதி பிரிண்ட் எடுத்துக்கொண்டு, தங்கள் பயணத்துக்கு முன்னர் காண்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை தவிர பிற மாவட்டங்களின் பகுதிகள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள விவரம் பின்வருமாறு:
மண்டலம் 1
கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்
மண்டலம் 2