தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / headlines

பொதுப்பணித் துறையில் நிர்வாக பிரிவு உருவாக்கம் - தமிழ்நாடு அரசு அரசாணை - Public Works department

பொதுப்பணித் துறையில் நிர்வாக பிரிவு உருவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொதுப்பணித்துறையில் நிர்வாக பிரிவு உருவாக்கம்
பொதுப்பணித்துறையில் நிர்வாக பிரிவு உருவாக்கம்

By

Published : Jun 28, 2021, 10:42 PM IST

சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் நீர்வளத் துறைக்கு தனியாக துரைமுருகன் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.

அதே போன்ற பொதுப்பணித் துறை அமைச்சராக ஏ.வ. வேலு நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பொதுப்பணி, நீர்வளத் துறையில் நிர்வாகத்தைப் பிரித்து தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.


அதில், பொதுப்பணித் துறையில் (பொது) நிர்வாக பிரிவு ஏற்படுத்தப்படுவதாகவும், இந்தப் பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முதன்மை தலைமை பொறியாளர் பணி நியமனம், காலி பணியிட அறிக்கை தயார் செய்வது, சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்வது, பதவி உயர்வு, பணியிட மாற்றம், ஊதிய நிர்ணயம், ஒழுங்குமுறை நடவடிக்கை, ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய அறிக்கை தயார் செய்வது போன்ற பணிகளை நிர்வாக பிரிவு மேற்கொள்ளும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details