மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கேட்டு கொந்தளிப்பான சூழலில் நடைபெற்ற சட்டப் போராட்டத்தை மையமாகக் கொண்டு “கலைஞரின் கடைசி யுத்தம்” என்ற நூல் எழுதப்பட்டது.
'கலைஞரின் கடைசி யுத்தம்' நூல் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியீடு - கருணாநிதி நினைவுநாள்
சென்னை : ஊடகவியலாளர் ரமேஷ் குமார் எழுதிய 'கலைஞரின் கடைசி யுத்தம்' என்னும் புத்தகத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.
'கலைஞரின் கடைசி யுத்தம்' புத்தகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் !
கருணாநிதியின் நினைவு நாளையொட்டி இந்த நூல் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆகஸ்ட் 6) வெளியிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்த புத்தகத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அணிந்துரை வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்வின் போது திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், தலைமை நிலைய அலுவலக செயலாளர் பூச்சி முருகன், திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.