தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / headlines

ரூ.25.96 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கினார் துணை முதலமைச்சர் - தற்போதைய தேனி செய்திகள்

தேனி: நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு கடன் சங்க கட்டடத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரூ.25.96 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

Deputy Chief Minister OPS provided loans worth Rs. 25.96 lakhs in Theni
Deputy Chief Minister OPS provided loans worth Rs. 25.96 lakhs in Theni

By

Published : Dec 13, 2020, 3:59 PM IST

தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போடி சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பூதிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்பில் நவீனமயமாக்கப்பட்ட கட்டடத்தை திறந்துவைத்தார். மேலும் குறுகிய கால பயிர் கடன், ஆடு வளர்ப்பு கடன் திட்டத்தின் கீழ் 14 பயணாளிகளுக்கு ரூ. 25.96 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், எம்பி ஓ.பி.ரவீந்திரநாத், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details