தமிழ்நாடு

tamil nadu

'நாட்டில் அவரச நிலையை பிரகடனம் செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

By

Published : May 12, 2021, 3:08 PM IST

Updated : May 12, 2021, 3:50 PM IST

இந்தியாவில் அவரச நிலையை பிரகடனம் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3.48 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாடு, கர்நாடாக, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் அவரச நிலையை பிரகடனம் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய கோரிக்கை

அந்த மனுவில், ”இந்தியாவில் மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன், மருந்து தட்டுப்பாடு காரணமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். ஆக்சிஜன் கம்பெனிகள் பல தனியார் வசம் இருப்பதால் அவர்கள் விலை அதிகமாக விற்கின்றனர். இதனால் ஏழை எளிய மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய வேண்டும். மேலும் இந்தியாவிலுள்ள ஆக்ஸிஜன் கம்பெனிகள், மருந்து தயாரிக்கும் கம்பெனிகள், மருத்துவமனைகள் ஆகிய அனைத்தையும் இந்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து யுத்த அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.

அவசர நிலையை பிரகடனம் செய்ய எங்களுக்கு அதிகாரம் கிடையாது

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. கரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Last Updated : May 12, 2021, 3:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details