தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / headlines

வூஹானில் அதிகரிக்கும் கரோனா தொற்று - உலகச் செய்திகள்

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

வூஹானில் அதிகரிக்கும் கரோனா
வூஹானில் அதிகரிக்கும் கரோனா

By

Published : May 25, 2020, 5:10 PM IST

சீனாவில் கரோனா அறிகுறி தொற்றுடன் 40 பேர் உட்பட மொத்தம் 51 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலானோர் வூஹான் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 10 நாட்களில் 60 லட்சத்திற்கும் மேலான மக்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சீன சுகாதார அலுவலர்கள் இன்று(மே 25) தெரிவித்துள்ளனர்.

இதுவரை கரோனா தொற்று அறிகுறிகள் கொண்ட 40 பேரில் 38 பேர் வூஹான் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். தற்போதுவரை மொத்தம் ஒரு கோடிக்கும் மேலான சீன மக்களை மேற்கொண்ட பரிசோதனையில் 396 பேர், சீன அரசின் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் 326 பேர் வூஹான் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா அறிகுறி கொண்ட, உறுதிசெய்யப்பட்ட மக்கள் யாருக்கும் தொண்டைப் புண், காய்ச்சல், சளி போன்ற எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இது மக்களிடையே பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி, மார்ச் மாதங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரோனா பாதிப்புகள் வூஹான் மாகாணத்தில் இருந்தன. பின்னர் அறிகுறிகள் தெரியாதவர்களைக் கண்டறிய கடந்த மே 14ஆம் தேதி நியூக்ளிக் அமில பரிசோதனையை விரிவுபடுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்த நியூக்ளிக் அமில பரிசோதனை என்பது ரத்த பரிமாற்றங்களை பரிசோதிக்கும் மூலக்கூறு நுட்பமாகும்.

மேலும் மே 14 முதல் 23ஆம் தேதி வரை 60 லட்ச பேருக்கு இந்தப் பரிசோனை செய்யப்பட்டுள்ளதாக வூஹான் சுகாதார நகராட்சி ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த மே 23ஆம் தேதி மட்டும், 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதுவரை, சீனாவில் மொத்தம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 82 ஆயிரத்து 985 பேரும், இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 634 பேரும் என கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் கூறியுள்ளது.

இதையும் படிங்க: சீனாவில் தற்போது கரோனா நிலை என்ன?

ABOUT THE AUTHOR

...view details