தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / headlines

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள்? - Chennai high court news

சென்னை: 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் இடம்பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா இரண்டு இடங்களை கூடுதலாக அதிகரிக்க முடியுமா? என விளக்கமளிக்க தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Allot Additional medical seats for reservation students, MHC order
Allot Additional medical seats for reservation students, MHC order

By

Published : Dec 11, 2020, 8:30 PM IST

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் தர்ஷினி, இலக்கியா ஆகியோருக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் கட்டணம் செலுத்த முடியாததால் அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என நவம்பர் 20ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதையடுத்து, இந்த அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்தகோரி மாணவிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த், வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு முடிந்த பிறகு கிடைக்கும் 160 இடங்களில், 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ், 12 இடங்கள் கிடைக்கும் எனவும், சில மருத்துவ கல்லூரிகள் மூலம் கூடுதல் இடங்கள் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, முதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு தனியார் கல்லூரிகளில் இடம்பெற்று கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 51 மாணவர்களுக்கு மருத்துவ கல்வி இடங்கள் கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதி, எதிர்காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் கடினமாக உழைத்துப் படித்தால் மருத்துவ இடம் கிடைக்கும் என்ற உத்வேகத்தை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அரசு பள்ளி மாணவர்கள் மீதான சமூகத்தின் பார்வையை மாற்ற இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவித்த நீதிபதி, 51 மாணவர்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 2 இடங்களை அதிகரிப்பது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details