தூத்துக்குடி:ஸ்டெர்லைட் ஆதரவு கிராம கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் எம்.ஜெயபெருமாள் தலைமையில் வழக்கறிஞர்கள் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வதந்திகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்டெர்லைட் ஆதரவு கிராம கூட்டமைப்பினர் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
பின்னர் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் எம்.ஜெயபெருமாள் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை என்ற பெயரிலும் கேன்சர் என்ற பெயரிலும் மக்கள் மத்தியில் தவறான செய்திகளை பொதுமக்கள் நம்பும்படி பரப்பி உள்ளனர்.
பொது மக்களை மூளை சலவை செய்து திசை திருப்பி போராட்டத்தில் ஈடுபட செய்துள்ளனர். அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கு எதிராகவும் சட்டவிரோத காரியங்களில் ஈடுபட பொதுமக்களை தூண்டியுள்ளனர். பொது அமைதியை குலைக்கும் நோக்கில் மக்களிடம் நேரடியாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தி பொதுமக்கள் இளைஞர்கள் மாணவர்கள் வாழ்வை பாழ்படுத்தி உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இது போன்ற சட்டவிரோத செயலை எந்தவித தடையின்றி தொடர்ந்து செய்து வருகின்றனர்.