தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

யோகி பாபு மகளின் பிறந்தநாளுக்கு முதியோர் இல்லங்களுக்கு அன்னதானம் வழங்கிய விஷால்! - vishal

Yogi Babu's daughter's birthday: யோகிபாபு மகளின் பிறந்தநாளுக்கு பரிசு கொடுப்பதற்கு மாறாக தனது தேவி அறக்கட்டளை மூலம் விஷால் முதியோர் இல்லங்களுக்கு மகளின் பெயரில் அன்னதானம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

vishal
விஷால்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 1:32 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரில் ஒருவர், யோகிபாபு. நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருபவர். கடந்த 2020ஆம் ஆண்டு பார்கவி என்ற பெண்ணுடன் யோகி பாபுவிற்கு திருமணம் நடைபெற்றது. கரோனா காலம் என்பதால், எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், மகளின் முதல் பிறந்தநாளை நேற்று முன்தினம் (அக்.24) வெகு சிறப்பாக யோகிபாபு கொண்டாடினர். தமிழ் சினிமாவில் உள்ள ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு குழந்தையை வாழ்த்தினர். இந்நிலையில், விஷால் யோகிபாபு மகளின் பிறந்த நாளை ஒட்டி, அந்த குழந்தையின் பெயரில் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் உணவளித்து, அவர்களின் வாழ்த்து செய்தியுடன் யோகிபாபு குடும்பத்தாரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.

இதையும் படிங்க:விரைவில் 2,000க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details