தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகர் விஜய் பிறந்தநாள் - உடலில் விஜய்யின் முகத்தை பெரிய டாட்டூவாக வரைந்த ரசிகர்!! - chennai

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் ஒருவர் உடலில் விஜய்யின் முகத்தை பெரிய டாட்டூவாக வரைந்துள்ளார்.

நடிகர் விஜய் பிறந்தநாள் - உடலில் விஜய்யின் முகத்தை பெரிய டாட்டூவாக வரைந்த ரசிகர்
நடிகர் விஜய் பிறந்தநாள் - உடலில் விஜய்யின் முகத்தை பெரிய டாட்டூவாக வரைந்த ரசிகர்

By

Published : Jun 14, 2022, 2:19 PM IST

திரைப்பட நடிகர் விஜய் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. விஜய்யின் பிறந்தநாளில் கேக் வெட்டிக் கொண்டாடுவதும், நலத்திட்டங்கள் வழங்கியும் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபடத் தயாராகி வருகின்றனர்.

சேலத்தை சேர்ந்த நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான ராஜ்பாரதி என்பவர் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். அவரது திரைப்படங்களை முதல்நாளில் பார்ப்பதும், பிறந்தநாளின்போது நண்பர்களுடன் கேக்வெட்டி கொண்டாடுவதுமாக இருந்து வருகிறார்.

விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடி வாழ்த்து தெரிவிக்கவேண்டும் என்று எண்ணிய நிலையில் திருச்சியில் பிரபல டாட்டூஸ் டிசைனரின் கைவண்ணத்தில் தனது முதுகில் நடிகர் விஜய்யின் முகத்தினை மிகப்பெரிய அளவில் பச்சை குத்தி பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய் பிறந்தநாள்

இந்த டாட்டூ வரைவதற்கு 16 மணிநேரம் எடுத்துக்கொண்டதாக கூறும் டாட்டு டிசைனர் இந்த டாட்டூவை வரைந்துக்கொண்டதன் மூலம் நிச்சயம் விஜய்யை நேரில் சந்திக்கும் நீண்டநாள் கனவும் நிறைவேறும் என்று நம்பிக்கையுடன், பிறந்தநாளை கொண்டாட தயாராகி வருகிறார்.

இதையும் படிங்க: 'விக்ரம்' பட நடிகைக்கு கொடைக்கானல் படப்பிடிப்பில் பாராட்டு விழா!

ABOUT THE AUTHOR

...view details