தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு, 'குஷி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். 'குஷி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'குஷி' திரைப்படத்தை இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்குகிறார். விஜய் தேவர்கொண்டா மற்றும் சமந்தா ஜோடியாக நடிக்கும் முதல் படம் என்பதால் இருவரும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு - விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு
விஜய் தேவரகொண்டா
விஜய் தேவர்கொண்டா மற்றும் சமந்தா ஆகியோருடன் ஜெயராம்,சச்சின் கெடகர்,முரளி ஷர்மா,லக்ஷ்மி,அலி,ரோகிணி,வெண்ணிலா கிஷோர்,ராகுல் ராமகிருஷ்ணா,ஸ்ரீகாந்த் ஐயங்கார்,சரண்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதையும் படிங்க: ’பர்த்டே பேபி’ சமந்தா க்யூட் க்ளிக்ஸ்