சென்னை: தமிழ் திரையுலகின் நடிகரும், முன்னணி இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, சமீபத்தில் தற்கொலை செய்து உயிரிழந்தார். இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திரையுலகம் மட்டுமின்றி விஜய் ஆண்டனியின் ரசிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் மீராவின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், விஜய் ஆண்டனி இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன் முதலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது உலகத்தை விட்டு சாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குத்தான் சென்றிருக்கிறாள். அவள் என்னுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள்.