தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இணையத்தில் லீக்கான வாரிசு பாடல் காட்சி... படக்குழு அதிர்ச்சி - நடிகர் விஜய்

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் பாடல் காட்சி ஒன்று இணையத்தில் கசிந்தது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் லீக்கான வாரிசு பாடல் காட்சி
இணையத்தில் லீக்கான வாரிசு பாடல் காட்சி

By

Published : Aug 25, 2022, 9:13 AM IST

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இணையத்தில் லீக்கான வாரிசு பாடல் காட்சி

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் லீக்கானது. இது இயக்குனர் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் விஜய், பிரபு, சரத்குமார் பங்கேற்ற மருத்துவமனை காட்சி ஒன்று மீண்டும் லீக்கானது. இதன் பிறகு படப்பிடிப்பு தளத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று விஜய் மற்றும் ராஷ்மிகா பங்கேற்ற பாடல் காட்சி ஒன்று லீக்காகியுள்ளது. இதில் இருவரும் நடனம் ஆடுவது போன்று இடம் பெற்றுள்ளது. இது படக்குழுவினருக்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து வாரிசு படத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ லீக்காகி இருப்பது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தயவு செய்து ரசிகர்கள் யாரும் வாரிசு படத்தில் இருந்து லீக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர வேண்டாம் என்று இயக்குநர் வம்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன்... மீண்டும் இணையும் படையப்பா கூட்டணி

ABOUT THE AUTHOR

...view details