தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

படப்பிடிப்பின் போது உதவி இயக்குனரை தாக்கிய ஹீரோ

சின்னத்திரை சீரியல் படப்பிடிப்பில் உதவி இயக்குனரை தாக்கிய சீரியல் ஹீரோவால் பரபரப்பு ஏற்பட்டது.

உதவி இயக்குனரை தாக்கிய ஹீரோவால் பரபரப்பு
உதவி இயக்குனரை தாக்கிய ஹீரோவால் பரபரப்பு

By

Published : Aug 25, 2022, 10:45 AM IST

சென்னை: மதுரவாயல் கிருஷ்ணா நகரில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதில் கதாநாயகனாக நடித்து வரும் நவீன் என்பவர் அதே சீரியலின் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் குணசேகரன் என்பவரை தாக்கியுள்ளார்.

இதில் குணசேகரனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக குணசேகரன் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் "இந்த சீரியலின் உதவி இயக்குனராக பணியாற்றி வருவதாகவும், கதாநாயகனாக நடித்து வரும் நவீன் என்பவர் சீன் எடுக்க நேரமாகிவிட்டது வாருங்கள் என்று அழைத்தேன்.

அதற்கு எனக்கு எல்லாம் தெரியும் என்று கூறியும், தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்ததாகவும், புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இரு தரப்பையும் அழைத்து மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சங்கத்தின் மூலம் பேசிக்கொள்வதாக இரு தரப்பினரும் கிளம்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

பூலோகம் ,பட்டாசு, மிஸ்டர் லோக்கல், போன்ற திரைப்படங்களில் நவீன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மகன் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காத விரக்தியில் மன்சூர் அலிகான்

ABOUT THE AUTHOR

...view details