சென்னை: இயக்குநர்விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி நடிக்கும் புதிய திரைப்படம் “நானி 31”. இந்த படத்தை DVV தனய்யா மற்றும் DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ் கல்யாண் தாசரி ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்க உள்ளனர்.
நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான தசரா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து நானி இணையும் இந்த கூட்டணி, மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் இருக்கும் என்பதை படக்குழு தரப்பில் வெளியான அறிவிப்பு வீடியோவில் தெரிகிறது.