மும்பை: தமிழ் சினிமா மட்டுமின்றி, டோலிவுட் மற்றும் கோலிவுட் உலகிலும் கொடி கட்டிப் பறக்கும் நடிகையாக சமந்தா அறியப்படுகிறார். இந்த நிலையில், இவர் நேற்று (ஜூலை 8) இரவு மும்பை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது, அங்கு இருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் புறப்பட்டுச் சென்றார்.
இருப்பினும், சமந்தாவை சுற்றி வளைத்த லென்சுகளால் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து உள்ளன. அந்த புகைப்படங்களில், ஸ்டைலிஷான கேஷுவல் லுக்கில் காணப்படுகிறார், சமந்தா. டிராப்-ஷோல்டர் வெள்ளை டி-ஷர்ட் அணிந்த சமந்தா, அதற்கு இணையாக நீல நிறத்தினாலான பூட்கட் டெனிம் ட்ரவுசர் அணிந்து கியூட்டாக உள்ளார்.
அது மட்டும் அல்லாமல், அவர் அணிந்திருந்த வெள்ளை நிற தொப்பி மற்றும் கறுப்பு நிற முகக்கவசம் சமந்தாவை மேலும் அழகாக்கி இருந்தது. மேலும், கருப்பு நிற ஷூ அணிந்த நிலையில் சிறிய அளவிலான பேக் போட்டவாறு நடந்து வந்தார், சமந்தா. மேலும், சமந்தா தனது அடுத்தடுத்த நகர்வில் கவனம் செலுத்தி வருகிறார்.
முக்கியமாக, மஹாநடி படத்திற்குப் பிறகு, விஜய் தேவரகொண்டா உடன் ‘குஷி’ என்ற படத்தில் நடித்து உள்ளார். ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் வருகிற செப்டம்பர் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அது மட்டுமல்லாமல், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சிட்டாடல்’ இணைய தொடரும் த்ரில்லர் வகையில் சினிமா ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
இதனிடையே, மயோசிடிஸ் டயக்னோசிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த சமந்தா, அதில் இருந்து வெகு நாட்கள் கழித்து மீண்டு வந்து, அடுத்தடுத்த தனது வெளியீடுகளால் மீண்டும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். இருப்பினும், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சாகுந்தலம்’ திரைப்படம் தோல்வியைத் தழுவியது.
மேலும், தி பேமிலிமேன் 2 நடிகையான சமந்தா, அடுத்த சில மாதங்களுக்கும் சிகிச்சைக்காக ஒரு சிறிய இடைவேளையை எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இந்த இடைவேளைக்குப் பிறகு சமந்தா படு பிஸியாக இருப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சமீபத்தில் தனது சிகிச்சை காலத்தையும், அதில் இருந்து தான் மீண்டு வந்தது குறித்தும் மிகவும் உருக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இளசுகளை கிறங்கடிக்கும் மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் போட்டோஸ்!