சென்னை: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், தி வாரியர். இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படத்தில் ராம் பொத்தினேனி கதாநாகயனாக நடித்துள்ளார். டோலிவுட் சினிமாவின் முண்ணனி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், நடிகர் சிலம்பரசனின் குரலில் உருவாகிய ‘சார்ட் பஸ்டர் புல்லட்’ என்னும் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளில் இறங்கியுள்ள ராம் பொத்தினேனி, இன்று நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியின் போது தனது நெருங்கிய நண்பரான நடிகர் சிலம்பரசனை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.