சென்னை:பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 49. அவரது மறைவுக்கு திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது குரலில் வெளியான புள்ளினங்காள் பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது.
பின்னணி பாடகர் பம்பா பாக்யா காலமானார் - பிகில்
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பு காரணமாக காலமானார்.
அதேபோல சர்கார் படத்தில் சிம்டாங்காரன், பிகில் படத்தில் காலமே காலமே, பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னி நதி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் பாடல்களை பாடியுள்ளார். திடீர் மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது உடல் பாடியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனது குரு விக்ரமனின் மகனை நாயகனாக்கும் கே.எஸ்.ரவிக்குமார்...!