தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஆஹா-வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் பேட்டைக்காளி தீபாவளிக்கு ரிலீஸ் - santhosh narayanan

ஆஹா தமிழுடன் இணைந்து இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்திருக்கும் 'பேட்டைக்காளி' தொடர் தீபாவளிக்கு வெளியாகிறது.

ஆஹாவுடன் வெற்றிமாறன் இணைந்து தயாரிக்கும் பேட்டைக்காளி!
ஆஹாவுடன் வெற்றிமாறன் இணைந்து தயாரிக்கும் பேட்டைக்காளி!

By

Published : Sep 29, 2022, 7:32 PM IST

Updated : Sep 29, 2022, 10:58 PM IST

ஆஹா தமிழுடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கும் 'பேட்டைக்காளி' தொடரின் மோஷன் போஸ்டருக்கான முதல் பார்வை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 'ஜல்லிக்கட்டு' உலகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் முதல் வெப் சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனித்துவமான கதைகள் மற்றும் ஒரிஜினல் கண்டெண்ட் என்ற அடிப்படையில் பல அசத்தலான படைப்புகளை பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் ஆஹா தமிழின் அடுத்த படைப்பான 'பேட்டைக்காளி', ஜல்லிக்கட்டு கதையை அடிப்படையாகக் கொண்டது.

தமிழ் சினிமாவில் கவனிக்கத்த இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் தயாரித்துள்ளதால் இந்த தொடருக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 'பேட்டைக்காளி' என்ற இந்தத் தலைப்பு, பார்வையாளர்காளிடையே 'யார் அந்த பேட்டைக்காளி' என்ற ஆர்வத்தை உருவாக்கி உள்ளது. இந்த இணையத் தொடர், நல்ல கதையம்சத்துடன் கூடிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவை கொண்டுள்ளது.

இந்த படத்தை வெற்றிமாறனின் நீண்ட கால உதவி இயக்குநரான ராஜ்குமார் இயக்கி உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்தான விவரம் விரைவில் வெளியிடப்படும்.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இணையத்தில் வெளியிடத் தடை

Last Updated : Sep 29, 2022, 10:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details