தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

“சக பாடலாசிரியருக்கு பாடல் எழுதியது மகிழ்ச்சி”.. சிவகார்த்திகேயனை கலாய்த்த மதன் கார்க்கி! - Sivakarthikeyan

'Ayalaan' teaser: “நடிகர் என்பதை விட, சக பாடலாசிரியருக்கு பாடல் எழுதியது மகிழ்ச்சியாக உள்ளது” என அயலான் படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் மதன் கார்க்கி கூறியுள்ளார்

அயலான் படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயனை கலாய்த்த மதன் கார்க்கி
சக பாடலாசிரியருக்கு பாடல் எழுதியது மகிழ்ச்சி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 9:17 AM IST

சென்னை: இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று (அக்.06) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமார், பால சரவணன், இஷா கோபிகர், மதன் கார்க்கி, விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

“இன்று நேற்று நாளை” பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம், அயலான். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பானுபிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு ஏலியன் நடித்துள்ளது.

இந்நிலையில், ‘அயலான்’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மதன் கார்க்கி மேடையில் பேசுகையில், “இப்படத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சியாக இருந்தது. ரஹ்மானுடன் நிறைய பாடல்கள் பணிபுரிந்துள்ளேன்.‌ இப்படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளேன். அந்தந்த காலகட்டத்திற்கு தகுந்த மாதிரி நிறைய உழைத்துள்ளோம். நடிகர் என்பதை விட சக பாடலாசிரியருக்கு பாடல் எழுதியது மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறினார்.

இயக்குநர் ரவிக்குமார் மேடையில் பேசுகையில், “இந்த காலகட்டத்தை நான் கடந்து வர முக்கிய காரணம் குடும்பமும், நண்பர்களும்தான். எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பவர் சிவகார்த்திகேயன். அவன் என்னை தாங்கிப் பிடிக்கிற நம்பிக்கை. கரோனா இரண்டு ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு மிக அசாதாரணமானது. இக்கதையை சிவகார்த்திகேயன் நம்பினார். என்னுடைய எல்லா நிகழ்விலும் அவர் இருப்பார். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்கு நன்றி.

மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் கூட படம் பண்ணனும் சொல்லும்போது சந்தோஷத்தைத் தாண்டி சிறு பதட்டமாக இருந்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் என்னுடன் மிக இயல்பாக பழகினார். அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து, என்னுடைய கதையை கேட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் படம் பார்த்துவிட்டு பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து, இந்தப் படம் உருவான 5 வருட காலமும் உதவி இயக்குநர்கள் என்னுடன் கஷ்டப்பட்டுள்ளனர். அவர்களது உழைப்பு மிக அசாத்தியமானது. இந்த கதையை சிவகார்த்திகேயன் நம்பியதுதான் படம் உருவானதற்குக் காரணம். வில்லன் மற்றும் பல நடிகர்கள் என்னை ஆங்கிலம் கற்றுக்கொள்ளச் சொன்னார்கள். மற்ற மொழி நடிகர்களுடன் தொடர்பு கொள்ள என்னுடைய உதவி இயக்குநர்களிடம் சொல்லித்தான் சொல்ல வைப்பேன்.

இன்னும் சர்வதேச அளவில் செல்ல வேண்டும் என்றால் மொழி அவசியம் என்றார்கள். மேலும், இந்தப் படத்தை காப்பாற்றுவதற்கு எடிட்டர்கள்தான் காரணம். கரோனா காலகட்டத்தில் விஎப்எக்ஸ் இல்லாமலேயே டீசர் கட் செய்து அனுப்பினார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறினார்.

இதையும் படிங்க:எம்.ஜி.ஆர்-க்குப் பிறகு நானா? - சிவகார்த்திகேயன் கலகல பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details