சென்னை:தமிழ் திரையுலகில் சின்னக்குயில் என அழைக்கப்படுபவர், கே.எஸ்.சித்ரா. இவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதான மொழிகளில் தனது இனிமையான குரலில் பல்லாயிரக்கணக்கான பாடலை பாடியுள்ளார். பல இசையமைப்பாளர்களின் இசையில், பல முன்னணி பாடகர்களோடு பல பாடலை இவர் பாடியுள்ளார். சின்னக்குயில் சித்ராவின் குரலுக்கு மயங்காத மனங்கள் நம்மில் இருக்க முடியாது.
குறிப்பாக இவர் பாடிய "ஒவ்வொரு பூக்களுமே..." பாடல் இன்று வரை, சிறந்த தன்னம்பிக்கை அளிக்கும் பாடலாக இருக்கிறது. இவர் இன்று (ஜூலை 27) தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு பிரத்யேக பேட்டியையும் அளித்துள்ளார்.
ஈடிவி பாரத் சார்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி கூறிய பின்னணி பாடகர் சித்ரா, தான் முதன் முதலின் சென்னை வந்த அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டாடர். இசையமைப்பாளர் ரவிந்திரன் இசையில் பாடுவதற்காக சென்னையில் உள்ள ஜெமினி ஸ்டூடியோவில் மலையாள படத்திற்காக பாட வந்ததாகவும், பின் "நொக்கேதாதுறது கண்ணும் நட்டு" என்ற மலையாளப் படத்தை தமிழில் மருவுருவாக்கம் செய்த "பூவே பூச்சூடவா" என்ற படத்திற்காக இசையமைப்பாளர் இளையராஜா அழைத்ததை அடுத்துதான், தான் சென்னை வந்ததாகவும் கூறினார்.
முதன் முதலாக இளையாரஜா முன் பாடும்போது அவர் என்ன சொன்னார்?"எதவது பாடுங்கனு சொன்னார். நான் தியாகராஜ கீர்த்தனை ராகத்தில் ஒரு பாடலை பாடினேன். ஆனால், முதன் முதலில் ராஜா சார் முன்னால் பாடும்போது இருந்த பதற்றத்தில் நிறைய தவறுகளோடுதான் பாடினேன். அவர் நான் செய்த தவறுகளை சரி செய்து எனக்கு வாழ்த்து தெறிவித்தார். பின் அடுத்த நாளே என்னை அழைத்து "நீதானா அந்தக்குயில்" படத்தில் ‘பூஜைக்கேத்த பூவிது’ என்ற பாடலை பாட வைத்தார்"
சிறியவதில் இருந்தே பாட்டு பாடும் நீங்கள், அப்போதே பாடகர்தான் ஆக வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்களா?
"சிறுவயதில் இருந்தே நான் இசை மீது மிகுந்த ஆர்வத்தோடு இருந்தேன். நான் என்னுடைய கல்லூரி படிப்பைக் கூட இசை சார்ந்துதான் படித்தேன். ஆனால், நான் அதை முழுமையாக நிறைவேற்றவில்லை. ஒருவேளை அதை நான் முழுமையாக படித்திருந்தால், ஏதாவது ஒரு கல்லூரியில் பேராசிரியையாக அல்லது ஏதாவது ஒரு இசைப் பள்ளியில் ஆசிரியராகத்தான் இருந்திருப்பேன். அதைத்தான் நானும் எதிர்பார்த்தேன். ஆனால், இளையாராஜாவைத் தொடர்ந்து பல இசையமைப்பாளர்கள் என்னை பாட அனுகியபோதுதான் பின்னணி பாடகராவது என்ற முடிவை எடுத்தேன்.
முதன் முதலாக பின்னணி பாடகராக பாடிய அனுபவம் எப்படி இருந்தது?ரொம்ப பயமாக இருந்தது. ஆனால் என்னோடு அன்று கங்கை அமரன் பாடினார். அவருடைய நசைச்சுவைத்தனம் அனைவரும் அறிந்ததுதான். அவர் என்னை சிரிக்க வைத்தது என்னுடைய பதற்றத்தை சற்று குறைத்தது. ஆனாலும் பயத்தோடுதான் பாடினேன். அன்று எனக்கு நல்ல உறுதுணையாக இருந்தது இளையராஜாவின் அஸிஸ்டண்ட் சுந்தர்ராஜன்தான். நான் செய்த சின்ன சின்ன தவறுகளை, தன்னுடைய மகளுக்கு சொல்லித் தருவதுபோல் சொல்லி கொடுத்தார். இந்த நேரத்தில் அவர் இல்லை என்பது என்னை வருத்தமடையச் செய்கிறது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை பற்றி?என்னுடைய வாழ்வில் எனக்கு கிடைத்த பெரிய பாக்கியமாக நான் நினைப்பது, எஸ்பிபி சார் மற்றும் யேசுதாஸ் சார் ஆகியோரோடு இணைந்து பாடியதுதான். குறிப்பாக எஸ்பிபியோடு இணைந்து தெலுங்கு பாடல்கள் பாடும்போது, அவர்தான் எனக்கு தெலுங்கு வார்தைகளின் உச்சரிப்பு, அர்த்தம் ஆகியவற்றை கற்றுத் தருவார்.
எஸ்பிபியோடு இணைந்து பாடியதில் உங்களுக்கு பிடித்த பாடல்?மலேசியாவில் நடந்த கச்சேரி ஒன்றில் பங்கேற்கும்போது எனக்கு தொண்டை சரியில்லாமல் இருந்தது. நானும் அக்கச்சேரியில் பாடுவதாக இருந்தது. குறிப்பாக அப்போது அஞ்சலி..அஞ்சலி.. பாடல் இல்லாத கச்சேரிகளே கிடையாது. என்னை அந்த பாடல் பாட அழைக்கும்போது, மிகவும் அச்சப்பட்டேன். ஆனால் அவர் என் அருகில் நின்று என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். என்னால் எப்போதும் அதை மறக்க முடியாது.
எஸ்பிபி இல்லை என்பதை எப்படி உணர்கின்றீர்கள்?அவர் இல்லை என்பது என்னுடைய மனதில் பதியவே இல்லை. எங்கோ ஒரு ஊரில், ஏதோ ஒரு கச்சேரியில் பாடிக்கொண்டு இருக்கிறார் என்றுதான் நான் நினைத்துக் கொள்வேன். தினமும் அவரோடு பாடுவது போன்ற பல வீடியோக்களை மக்கள் எனக்கு அனுப்புகின்றனர். அதனால் என் மனதில் அவர் இல்லை என்பதே பதிவாகவில்லை. எங்கோ ஒரு இடத்தில்தான் இருக்கிறார் என்ற நம்பிக்கையில்தான் நான் இருக்கிறேன்"
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இருவருக்கும் என்ன வித்யாசம்?இளையராஜா இசையில் பாடும்போது, பாடலை நேரடியாக பதிவு செய்வார்கள். முழுமை பெற்ற பாடலை அங்கேயே கேட்டு விடலாம். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும்போது, முழுமையான பாடலை பாடல் வெளியாகும்போதுதான் கேட்க முடியும். அந்த காலத்தில் நான் இதை பெரிய வித்யாசமாக உணர்ந்தேன்.