தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

டூப் இல்லாமல் கிஷோரிடம் சண்டை போட்ட குங்ஃபூ மாஸ்டருக்கு பாராட்டு - actor kishore

மஞ்சக்குருவி படத்தின் சண்டை காட்சியில் ரோப் மற்றும் டூப் இல்லாமல் தன்னுடன் சண்டையிட்ட குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகத்தை கிஷோர் கட்டிப்பிடித்து பாராட்டினார்

டூப் இல்லாமல் சண்டை காட்சியில் ஈடுபட்ட நடிகரை பாராட்டிய கிஷோர்
டூப் இல்லாமல் சண்டை காட்சியில் ஈடுபட்ட நடிகரை பாராட்டிய கிஷோர்

By

Published : Sep 2, 2022, 1:56 PM IST

சென்னை: வி.ஆர். கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரிக்கும் "மஞ்சக்குருவி" படத்திற்காக சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுவருகிறது. அப்போது, ரோப் மற்றும் டூப் இல்லாமல் தன்னுடன் ஒரு நடிகர் மோதுவதை பார்த்த நடிகர் கிஷோர், ஆச்சரியத்தில் ஆழ்ந்து பார்த்தார். அதன் பின் இயக்குநர் அரங்கன் சின்ன தம்பியிடம் அவர் குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது அவர் குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம் என்பதும், இதுவரை 10,000 மேற்பட்ட குங்ஃபூ கலைஞர்களை உருவாக்கியவர் என்பதும் தெரியவந்தது. உடனே ராஜநாயகத்தை கட்டிப்பிடித்து கிஷோர் பாராட்டினார் .

இந்த படத்தில் கிஷோர் நாயகனாக நடிக்க, புதுமுகம் விஷ்வா, நீரஜா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், கோலி சோடா பாண்டி, பருத்திவீரன் சுஜாதா, செந்தி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு வேல் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா முகமது படத்தொகுப்பு செய்கிறார். மிரட்டல் செல்வா சண்டைப் பயிற்சி அளித்துள்ளார்.

இதையும் படிங்க: சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் பெண்டுலம் படப்பிடிப்பு தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details