தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நவரச நாயகன் கார்த்தியின் தீ - இவன் இசை வெளியானது!

Thee ivan: நவரச நாயகன் கார்த்திக் நடித்துள்ள தீ இவன் படத்தின் இசையை பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 9:57 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற நடிகர், கார்த்திக். இவரது நடிப்பில் நீண்ட காலமாக எடுக்கப்பட்டு வரும் படம், ‘தீ இவன்’. மனிதன் சினி ஆட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரித்து, ஜெயமுருகன் T. M கதை, இயக்கத்தில் இப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தில் சன்னி லியோன், கார்த்திகை தீபம் புகழ் அத்திகா, சுகன்யா, சேது அபிதா, மஸ்காரா அஸ்மிதா, யுவராணி, ராதாரவி, இளவரசு, ஜான் விஜய், சிங்கம் புலி, சரவண சக்தி, சுமன்.து, ஹேமந்த், ஸ்ரீதர், சாரப்பாம்பு சுப்புராஜ், கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இது தொடர்பாக இயக்குநர் ஜெயமுருகன் கூறுகையில், “பராசக்தி, மாமன்னன், விடுதலை பட வரிசையில் சமூகப் பார்வை கொண்ட படம்தான் தீ-இவன். இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் நவரசங்களையும் கொட்டி இருக்கிறார். யார் பட்டத்தை யார் வேண்டுமானாலும் அடையலாம். ஆனால், நவரச நாயகன் பட்டத்தை யாரும் அடைய முடியாது. அவருக்கு நிகர் அவர்தான். அந்த வித்தையை தீ-இவன் திரைப்படத்தில் பார்க்கலாம்” என்றார்.

மேலும, “ஆழமான கலாச்சாரத்தைச் சொல்லும்போது ‘ஆம்பள கெட்டா வாழ்கை போச்சு பொம்பள கெட்டா வம்சமே போச்சு என்று சொல்வார்கள்’. அதன்படி ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த ஆணோ, பொண்னோ கலாச்சாரம் மீறி படி தாண்டி விட்டால், அது அவர்கள் வாழ்வை மட்டுமல்ல, அவர்கள் சந்ததியையே சமாதி ஆக்கிவிடும் என்பதையும், தாலி கட்டாமல் தாயாவதும், தாலி கட்டாமல் தாரமாக வாழ்வதும் தரங்கெட்ட செயல் என்றும் சொல்வார்கள்.

அதுபோல முறையற்ற வாழ்கை வாழ்பவர்கள், அவர்கள் வாழ்வு மட்டுமல்ல அவர்களின் சந்ததிகளின் வாழ்வும் எப்படி சீரழிந்து சின்னாப் பின்னமாகிறது என்பதையும், ஆள்பவர்கள் மட்டுமல்ல வாழ்பவர்களும் நல்லவர்களாக இருந்தால்தான் நல்ல சமூகத்தைப் படைக்க முடியும் என்ற சமூக நீதியையும் சொல்லும் சமூகப் பார்வை கொண்ட படைப்பு தீ-இவன்” என தெரிவித்தார்.

மேலும், இத்திரைப்படம் பற்றி சக்தி பிலிம்ஸ் திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகையில், “நான் இந்தப் படம் பார்த்தேன். மிக அற்புதமான படம். இது பேமிலி ஸ்டோரி. கார்த்திக்கும், சுகணன்யாவும் இணைந்து நடித்துள்ளனர். கார்த்திக் ரொம்ப அருமையாக நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளை பிரமாண்டமாக எடுத்துள்ளார்கள். கார்த்திக் மிரட்டி உள்ளார். திருப்பூரைச் சேர்ந்த தம்பி சுமன்.ஜெ, கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அதேபோல் வில்லன் நடிகர் ஸ்ரீதர், அசத்தி இருக்கிறார்.

படத்தில் பாடல் அனைத்தும் அற்புதமாக உள்ளது. பொதுவாகவே ஜெயமுருகன் படம் என்றால், ரோஜா மலரே ஆகட்டும் அதற்கு முன் பின் வந்த படங்களாகட்டும், பாடல்கள் சிறப்பாக இருக்கும். மற்றொரு சிறப்பு அவரை பாட்டுக்காரர் என்றுதான் சொல்வார்கள். அந்த அளவிற்கு மிகச்சிறப்பான பாடல்கள் தருவார்.

ஒரு பாட்டிற்கு சன்னி லியோனை ஆட வைத்து மிகப் பெரிய செலவில் பிரமாண்டமாக செட்டுப் போட்டு படமாக்கியுள்ளார்கள். நம் மண்ணின் கலாச்சாரத்தை தழுவி எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த படமும் உறுதியாக வெற்றி பெறும். வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:துல்கர் - வெங்கி அட்லூரி இணையும் "லக்கி பாஸ்கர்" பூஜையுடன் தொடங்கியது!

ABOUT THE AUTHOR

...view details