தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Karan Deol: திருமண புகைப்படங்களை வெளியிட்ட கரண் தியோல்! - Karan Deol

பிரபல பாலிவுட் நடிகர் கரண் தியோல், தனது திருமண புகைப்படங்களை முதல் முறையாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார்.

Karan Deol: திருமண புகைப்படங்களை வெளியிட்ட கரண் தியோல்
Karan Deol: திருமண புகைப்படங்களை வெளியிட்ட கரண் தியோல்

By

Published : Jun 21, 2023, 12:35 PM IST

ஹைதராபாத்:பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோலின் மகன் கரண் தியோல். இவருக்கும் த்ரிஷா ஆச்சார்யா என்பவருக்கும் கடந்த 18ஆம் தேதி மும்பையில் வைத்து திருமணம் நடைபெற்றது. த்ரிஷா ஆச்சார்யா, பிமல் ராயின் மகள் ரிங்கி பட்டாச்சார்யாவின் பேத்தி ஆவார். அதாவது, ரிங்கி பட்டாச்சார்யா - பாசு பட்டாச்சார்யாவின் பேத்தியே த்ரிஷா ஆச்சார்யா.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த திருமண நிகழ்வை அடுத்து, அன்றைய நாளின் மாலை நேரத்தில் கரண் தியோல் - த்ரிஷா பட்டாச்சார்யாவின் வரவேற்பு நடைபெற்றது. இதில் திரைப் பிரபலங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு புதுமண காதல் தம்பதிகளை வாழ்த்தினர்.

குறிப்பாக, சல்மான் கான், அமீர் கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோன் மற்றும் அனுபம் கெர் உள்பட பல்வேறு திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் திருமணப் புகைப்படங்களை பகிர்ந்துள்ள கரண் தியோல், “எங்கள் அன்பான குடும்பத்தின் அளவு கடந்த ஆசீர்வாதங்களுக்கும், ஆதரவிற்கும் நன்றி. இதனால் இதயப்பூர்வமான மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு வெளியிட்டுள்ள புகைப்படங்களில், கரண் தியோல் - த்ரிஷா ஆச்சார்யா தம்பதி அவர்களது தாத்தா - பாட்டியான மூத்த நடிகர் தர்மேந்திரா மற்றும் அவரது முதல் மனைவியான பிரகாஷ் கவுர் ஆகியோரிடம் ஆசீர்வாதம் வாங்கியவாறு அழகான புன்னகையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

மற்றொரு புகைப்படத்தில், புதுமணத் தம்பதிகள் சன்னி தியோல் - பூஜா தியோல் தம்பதி உடன் ஒரு கியூட்டான லுக்கில் உள்ளனர். மேலும் ஒரு புகைப்படத்தில் தியோலின் குடும்ப புகைப்படம் உள்ளது. இந்த குடும்ப புகைப்படத்தில் பாபி தியோல், சன்னி தியோல், கரண் தியோல், ராஜ்வீர், அபய், தானியா மற்றும் பூஜா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

அது மட்டுமல்லாமல், மற்றுமொரு புகைப்படத்தில் கரண் - சன்னி இருவரும் பாரம்பரிய உடை அணிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். அதேபோல், சன்னி தியோல் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், “இன்று நான் ஒரு அழகான மகளைப் பெற்றுள்ளேன். அவர்களுக்கு எனது ஆசீர்வாதங்கள். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்” எனக் கூறி உள்ளார்.

மேலும், நீண்ட நாட்களாக காதலித்து வந்த கரண் - த்ரிஷா, இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். ஆடை வடிவமைப்பாளரான த்ரிஷா ஆச்சார்யாவை கரணின் குடும்பம் மகிழ்ச்சி பொங்க வரவேற்று உள்ளனர். இவ்வாறு வெளியான புகைப்படங்களுக்கு, ‘என்ன ஒரு அழகான புகைப்படங்கள், அழகான புகைப்படங்களில் அழகான குடும்பம் மற்றும் தம்பதிக்கு வாழ்த்துகள்’ என அவரது ரசிகர்கள் சமூக வலைதளப் பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், கரண் தியோல், தனது தந்தையான சன்னி தியோலின் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டில் வெளியான பால் பால் தில் கே பாஸ் என்னும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். அதேநேரம், சன்னி தியோல் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் மக்களவை உறுப்பினராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Actress mirnalini ravi: இணையத்தில் வைரலாகும் மிருணாளினி ரவியின் ஹாட் புகைப்படங்கள்!

ABOUT THE AUTHOR

...view details