ஹைதராபாத்:நடிகர் அர்ஜுன் நடித்த ஜெய்ஹிந்த் திரைப்படமும், சுதந்திரத்தைக் காத்த அனைவருக்கும் சொல்லுகிறோம் எங்கள் முதல் வணக்கம் என்ற தாயின் மணிக்கொடி பாடலும் இன்றளவும் கேட்டால் மக்களைப் புல்லரிக்கச் செய்யும் உணர்வை ஏற்படுத்தும்.
அனைவருக்குள்ளும் இருக்கும் தேசப்பற்று, இதுபோன்ற படங்கள் மற்றும் பாடல்களைக் கேட்கும்போது பொங்கி எழும். பொதுவாக திரைப்படங்கள் வரலாற்று நிகழ்வுகளை ஆதாரப்படுத்தும் கருவியாக மாறி உள்ள நிலையில், அதைப் பார்த்து அடுத்த தலைமுறை நடந்த நிகழ்வுகளைத் தெரிந்து கொள்கிறது.
அந்த வகையில் தான் தற்போது தேச பக்தியை பறைசாற்றும் வகையிலும், சுதந்திர வரலாற்றை புதுப்பிக்கும் நோக்கத்திலும் 5 பாலிவுட் படங்கள் உருவாகியுள்ளன. திரைக்கு வர காத்திருக்கும் அந்த படங்கள் குறித்துப் பார்க்கலாம்.!
1.சாம் பகதூர்
1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்திய ராணுவத்தின் தளபதியாக இருந்து வெற்றிக் கொடி நாட்டக் காரணமாக இருந்தவர். வங்கதேசம் என்ற தனிநாடு உருவாக காரணமாக இருந்தவர் சாம் பகதூர் எனக் கூறப்படுகிறது. மேலும், பீல்ட் மார்ஷல் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்திய இராணுவத் தளபதியான சாம் பகதூர் குறித்த வரலாற்றுப் படம் இது. இந்த படத்தில் விக்கி கவுஷல், ஃபாத்திமா சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் பகதூராக விக்கி கவுஷல் தனது கதாபாத்திரத்தை திறம்படத் தாங்கி இருக்கிறாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி திரைக்குவரவுள்ளது.
2.பிப்பா
1971ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடந்த போர் வரலாறு குறித்த படம். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் 48 மணி நேரம் ராணுவ வீரர்கள் எதிர்கொண்ட போர்க் களத்தைத் தத்ரூபமாகப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் ராஜா மேனன். இன்ஷான் கட்டர் மற்றும் மிருணால் தாக்கூர் உள்ளிட்ட பல நடித்துள்ள இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தைக் கதைக்களமாகக் கொண்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமபல்ராம் சிங் மேத்தாவின் போர் நினைவுக் குறிப்பான தி பர்னிங் சாஃபிஸ் நாடக கதையால் ஈர்க்கப்பட்ட இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.