சென்னை: பாரிஸ் ஃபேஷன் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்று ராம்ப் வாக் செய்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலக அழகி பட்டம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு தற்போது 49 வயது ஆகிறது. இந்த வயதிலும் மாஸ் குறையாமல் தனக்கென ஒரு ரசிகர்களின் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
நீண்ட இடைவேளைக்குப் பின்னர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து ரசிகர்களின் நெஞ்சத்தைக் கவர்ந்தார். தொடர்ந்து அவர் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் மட்டுமே நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உலக அளவில் பிரபலமாக இருக்கும் அழகு பொருட்கள் நிறுவனமான எல் ஓரியல் (L’ Oreal) இன் பிராண்ட் அம்பாசிடராக பல ஆண்டுகளாக ஐஸ்வர்யா ராய் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க:2 வீடுகள், 18 போட்டியாளர்கள்.. கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன்-7.. போட்டியாளர்கள் யார் யார்?