கோவையில் "வாத்தி" (vaathi) திரைப்படம் வெளியானதை ஆட்டம் பாட்டம் என vibe செய்த ரசிகர்கள் கோயம்புத்தூர்:வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள "வாத்தி" (vaathi) திரைப்படம் முழுமையாக பள்ளி மாணவர்கள் மற்றும் குடும்ப சூழ்நிலைகளை எடுத்துரைக்கும் விதமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கோவையில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் காலை 8 மணி காட்சி திரையிடப்பட்டது. அதன்படி துடியலூர் பகுதியில் உள்ள முருகன் தியேட்டரில் வாத்தி திரைப்படம் 8 மணிக்கு திரையிடப்பட்டது. படத்திற்கு முன்னதாக கோவை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தினர் திரையரங்க வளாகத்தில் 60 அடி உயர பேனர்களை வைத்து பட்டாசுகள் வெடித்து, மேளதாளங்களுடன் வாத்தி திரைப்படம் வெளியானதை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடினார்கள்.
நிகழ்வில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கோவை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர் சங்கர், "எங்கள் தலைவர் தனுஷ் ரசிகர் தான் என் வாழ்க்கை என கூறியுள்ளார். நாங்கள் கூறுகிறோம் "எங்கள் தலைவர் தான் எங்கள் வாழ்க்கை". இனி வருகின்ற அனைத்து படங்களும் வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய தனுஷ் ரசிகர் மன்ற அமைப்பாளர் வினோத்குமார், "தனுஷ் தமிழ்நாட்டுக்கு மட்டும் வாத்தி அல்ல. தமிழ் சினிமாவின் வாத்தி. அதனைத் தொடர்ந்து நிரூபித்து வருகின்றார். மேலும் தனுஷ் படத்திற்கு படம் மாறுதல்கள் காட்டி வருகிறார். பிறர் எல்லாம் திருவிழா காலங்களில் தான் படங்களை வெளியிட்டு கெத்து காட்டுவார்கள்''எனவும் கூறினார்.
இதையும் படிங்க: இளசுகள் மனசை கொள்ளை கொள்ளும் கெளரி கிஷன் புகைப்படங்கள்!