சென்னை:‘எம்.எஸ் தோனி: தி அண்டோல்ட் ஸ்ரோரி’ என்ற திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நடிகை திஷா பதானி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு தன் இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பு ஒன்றை வெளியிட்டு அஞ்சலி செலுத்தி உள்ளார்.
2020ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று மும்பையில் உள்ள அவரது குடியிருப்பில் சுஷாந்த் சிங் மரணமடைந்தார். அவரது இறப்பு திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், திஷாவும் சுஷாந்த்தும் இணைந்து நடித்திருந்த ‘எம்.எஸ் தோனி: தி அண்டோல்ட் ஸ்ரோரி’ திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார், திஷா.
படத்தில் உள்ள உணர்ச்சிகரமான காட்சி ஒன்றைப் பகிர்ந்த திஷா, “இந்தி திரையுலகில் எனது இந்த முதல் படத்துக்கும், இந்த அழகான பயணத்துக்கும் நன்றி. உங்களை பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும், நீங்கள் பேசுவதை கேட்பவர்களையும், முழுமனதாக நேசித்துக் கொண்டாடுங்கள். எங்களால் விடை பெற முடியவில்லை. ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியுடனும் இருக்கிறீர்கள் என நம்புகிறோம்” என எழுதியிருந்தார்.
திஷா அந்த வீடியோவை பகிர்ந்தவுடன், திரைத்துறையில் உள்ள அவரது நண்பர்களும், சக ஊழியர்களும் கமெண்ட் செக்ஷனில் குவிந்தனர். வீடியோவுக்கு பதிலளித்த பாலிவுட் நடிகர் அனில் கபூர், "அற்புதமான காட்சி.. இருவரும் மிகவும் நன்றாக இருக்கிறீர்கள்.. ” என படத்தில் திஷாவின் நடிப்பை பாராட்டினார்.