பெய்ஜிங்: கடந்தாண்டு டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. அமேசான் ஒடிடி தளத்தில் வெளியான இத்திரைப்படம் உண்மை சம்பவத்தை கதைக் கருவாக கொண்டிருந்ததால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளையும் குவித்து வருகிறது.
ஜெய்பீம் படம் பார்த்து கண்ணீர் விட்ட சீன மக்கள் - jaibhim surya
பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் திரைப்படத்தை கண்ட சீன மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
ஜெய்பீம் படம் பார்த்து கண்ணீர் விட்ட சீன மக்கள்
அந்த வகையில், சீனாவில் நடைபெற்று வரும் பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் ’ஜெய் பீம்’ படம் திரையிடப்பட்டது. அப்போது இந்த படத்தை பார்த்த சீன மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அதோடு சூர்யா, லிஜோமோன் ஜோஸ் ஆகியோரின் நடிப்பை வெகுவாக பாராட்டினர். இதுபோல படங்களை மீண்டும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சென்னை, கோவையில் இசை நிகழ்ச்சி நடத்தும் அனிருத்...