தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகர் கவினின் "டாடா" பட ரிலீஸ் தேதி அறிவிப்பு - Actor Kavin Caste

நடிகர் கவின் நடிப்பில் உருவாகிவரும் டாடா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக் குழு அறிவித்துள்ளது.

நடிகர் கவின்
நடிகர் கவின்

By

Published : Jan 23, 2023, 1:32 PM IST

சென்னை:தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். தொடர்ந்து அதே தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் பெரும் பேசுபொருளானது. இதனால் கவின் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடத்திருந்தாலும், லிப்ட் படம் இவருக்கு கதாநாயகன் அந்தஸ்தை வாங்கிக்கொடுத்தது.

இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அண்மையில் இவரது நடிப்பில் உருவாகிவரும் டாடா படத்தின் ட்ரெய்லர் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கிய டாடா படத்தில் நடிகர் கவின் உடன் நாயகியாக அபர்ணா தாஸ், கே.பாக்யராஜ், ஜஸ்வர்யா, முதல் நீ முடிவும் நீ புகழ் ஹரீஷ், வாழ் புகழ் பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிப்ரவரி 10ஆம் தேதி படம் திரைக்கு வர உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மீண்டும் தொடங்கிய ‘தங்கலான்’ படப்பிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details