தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அதர்வா மீண்டும் போலீசாக மிரட்டும் "தணல்" - தணல்

அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் நடிகர் அதர்வா மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் மிரட்டும் தணல் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதர்வா மீண்டும் போலீசாக மிரட்டும் "தணல்"!
அதர்வா மீண்டும் போலீசாக மிரட்டும் "தணல்"!

By

Published : Feb 12, 2023, 7:01 AM IST

சென்னை: தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. பாணா காத்தாடி மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி, தொடர்ந்து நல்ல படங்களின்‌ மூலம்‌ ரசிகர்கள் மத்தியில் தனியிடம் பிடித்துள்ளவர். நகர்புற மற்றும் கிராமபுற படங்கள் என அனைத்து வகையான கதைகளிலும் நடித்து சினிமா பார்வையாளர்களுக்குப் பிடித்த ஒருவராக உள்ளவர்.

இவர் கடந்த ஆண்டு பட்டத்து அரசன், ட்ரிகர், குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த ஆண்டு அன்னை ஃபிலிம் புரொடக்‌ஷன் எம். ஜான் பீட்டர் வழங்கும் அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா "தணல்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் 'தணல்' (thanal) படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இதற்கு முன் அதர்வா போலீசாக நடித்த '100' மற்றும் 'ட்ரிக்கர்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன. தணல் திரைப்படம் 'வலி உன்னை ஹீரோவாக்கும் அல்லது வில்லனாக்கும்' என்ற கருப்பொருளை மையமாக வைத்து உருவாகி வருகிறது. காப் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் 'தணல்' படத்தில், லாவண்யா திரிபாதி கதாநாயகியாகவும், அஷ்வின் காக்குமானு வில்லன் வேடத்திலும் நடித்துள்ளனர்.

ஷா ரா, பரணி, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்ஷ்மி பிரியா, பரத், தௌபிக், சர்வா, பிரதீப் விஜயன் என பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். மேலும் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் ஆடியோ, ட்ரைய்லர் மற்றும் திரையரங்குகளில் படம் வெளியாகும் தேதி போன்றவை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அதானி ஊழல் விவகாரம்: அதானியால் பிரதமர் மோடி வீழ்வது உறுதி.. நாராயணசாமி பரபரப்பு பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details