தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அஜித் படங்களின் கலை இயக்குநர் மிலன் காலமானார்!

Art Director Milan died: நடிகர் அஜித்குமாரின் பல திரைப்படங்களில் கலை இயக்குநராக பணியாற்றிய மிலன் இன்று மாரடைப்பால் காலமானார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 1:29 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குநராக பணியாற்றி வந்த மிலன் மாரடைப்பு காரணமாக இன்று (அக்.15) காலமானார். மிலன் பெர்னாண்டஸ் என்ற இயற்பெயர் கொண்ட இவர், சென்னையில் பிறந்தவர். 1999ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் பணியாற்றத் தொடங்கி உள்ளார்.

ஆரம்பத்தில் பிரபல கலை இயக்குனர் சாபு சிரிலுடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் சிட்டிசன் (2001), தமிழன் (2002), ரெட் (2002), வில்லன் (2002) மற்றும் அந்நியன் (2005) ஆகிய படங்களில் மிலன் உதவி கலை இயக்குநராகப் பணியாற்றினார். இதனையடுத்து, கலை இயக்குநராக அவர் பணியாற்றிய முதல் படம் கலாபக் காதலன். இப்படம் 2006ஆம் ஆண்டு வெளியானது.

மிலன் பெர்னாண்டஸ் அடுத்ததாக ‘ஓரம் போ’ என்ற படத்தில் வேலை செய்தார். ஓரம் போ திரைப்படம் 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதுவரை 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். அஜித் நடித்த நிறைய படங்களுக்கு இவர் கலை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். அஜித்துக்கு மிகவும் பிடித்த கலை இயக்குநர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி விளம்பரங்களுக்கும் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். குறிப்பாக சக்தி மசாலா, ஆச்சி மசாலா, ஆர்எம்கேவி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் போத்தீஸ் போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் பணியாற்றியுள்ளார். மிலனின் மிகவும் பிரபலமான பணிகளில் ஒன்று, பில்லா திரைப்படம்.

2007ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் அஜித் குமார், நயன்தாரா, பிரபு மற்றும் நமீதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அவரது அடுத்த பிரபலமான படைப்பு விவேகம் (2017). இந்த நிலையில், அசர்பைஜானில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்புக்கு புறப்படும்போது மிலனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:"லியோ டிரெய்லர் நான் பார்க்கவில்லை" - நைசாக நழுவிய நடிகர் புகழ்! என்ன காரணம்?

ABOUT THE AUTHOR

...view details