அருண்பாண்டியன் நீண்ட இடைவெளிக்குப்பின் நடிக்கும் திரைப்படம் அன்பிற்கினியாள். இப்படத்தை கோகுல் இயக்கியுள்ளார். மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஹெலன் படத்தின் தமிழ் வடிவம்தான் இப்படம். இப்படத்தில் அருண்பாண்டியன் தந்தையாகவும் கீர்த்தி பாண்டியன் மகளாகவும் நடித்துள்ளனர்.
மார்ச் 5ஆம் தேதி வெளியாகும் அன்பிற்கினியாள் - சினிமா செய்திகள்
தந்தை மகள் பாசத்தைச் சொல்லும் அன்பிற்கினியாள் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
![மார்ச் 5ஆம் தேதி வெளியாகும் அன்பிற்கினியாள் Anbirkiniyal](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10779749-thumbnail-3x2-mov.jpg)
அன்பிற்கினியாள்
உண்மை தந்தை மகளே இப்படத்திலும் தந்தை மகளாக நடித்துள்ளனர். இப்படத்திற்குத் தணிக்கைக்குழு யு சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் வரும் மார்ச் மாதம் 5ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'ஸ்பைடர்மேன்' அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியீடு!
Last Updated : Aug 12, 2022, 8:41 PM IST