’நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு மீண்டும் மூன்றாவது முறையாக நடிகர் அஜித் குமார், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'AK61' என ரசிகர்களால் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
வங்கி கொள்ளை தொடர்பான கதையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், நடிகர் அஜித்துக்கு கிடைத்த பிரேக்கில் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். மேலும் திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று 4 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளி பதக்கங்களையும் வென்றார்.