சென்னை:இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இந்த ஒன்றை பெயரைச் சொன்னால் போதும் இன்றைய இளைஞர்களின் இதயத்துடிப்பு கூட இவரது இசையாகத்தான் துடிக்கும். இவர் தனது பாடல்கள் மூலம் ரசிகர்களின் உள்ளத்தில் கலந்திருப்பவர். உங்களது அன்றாட வாழ்க்கையில் இவரது ஒரு பாடலையாவது கேட்காமல் பொழுதை கடக்க முடியாது. இஸ்திரி கடை, டீக்கடை, பழக்கடை , பேருந்து நிறுத்தம், ஆட்டோ ஸ்டாண்ட் என உழைக்கும் மக்கள் இருக்குமிடம் ஆகட்டும் கல்லூரி மாணவர்கள் சூழ்ந்திருக்கும் இடமாகட்டும் அங்கெல்லாம் யுவனின் இசை ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த இசை அரக்கன் தமிழ் திரையுலகில் 26ஆவது ஆண்டை கொண்டாடுகிறார்.
1997ஆம் ஆண்டு சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் முதல் முறையாக இசை அமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற ஈர நிலா என்ற பாடல் இப்போது கேட்டாலும் உள்ளுக்குள் ஏதோ செய்யும். தொடர்ந்து இளைஞர்களின் இதரத்துடிப்புக்கு ஏற்ப இசையை கொடுத்துக்கொண்டு வந்தவர். மெல்ல மெல்ல பின்னணி இசையின் பிதாமகன் ஆனார்.